லூர்தியாவின் வேண்டுதல்/காதல் வேதனை
பாடல்: - பல்லவி : கொள்ளைக்காரா.. கொள்ளைக்காரா.. - என் உள்ளமதைக் கொள்ளை கொண்ட கொள்ளைக்காரா.. கொள்ளைக்காரா.. உன் வருகை நோக்கி எதிர்பார்த்தேன் உன் இருகை கொண்டு அணைப்பாயா.. கொதித்திடும் இதய தாகமதை அணைப்பாயா.. என் இதழ்ரசம் பருகி தணிவாயா.. தவித்திடும் விரகத் தீயை தணிப்பாயா.. (கொள்ளைக்காரா..) சரணம் குளிர்க் காத்தடிக்குது தளிர் காத்திருக்குது உயிர் தான்துடிக்குது எலும்பில் ஊசி தைக்குது ஏக்கம் என்னை வதைக்குது துன்பப் பூ திறந்து இன்பத்தேன் அருந்து - நீதானே என்னோட வருவாய் எப்போது வருவாய் தேன் கசந்திடும் தறுவாயினில் பூ கசங்கிடும் நுழைவாயினில் வருவாய் ஒருவாய் அமுதம் தருவாய் வஞ்சி அஞ்சுகத்தை இறுக்கி நெஞ்சில் கொள்ளை அருஞ்சுகத்தை அருளடா அருளடா அஞ்சி அகலாதே நெருங்கி பிஞ்சின் தொல்லைக் கொடுங்கனலை அகற்றடா அகற்றடா ...